நூல் வெளியீடுகள்

வாழும் வழி

"இந்த உலகம்தான் சரியாக இல்லை. நான் இந்த உலகை ஐம்பது வருடங்களுக்கு மேலாக நேரடியாகப் பரிபாலனம் செய்யவில்லை. மீண்டும் நேரடியாகப் பரிபாலனம் செய்வேன். பழைய சிவாலயங்கள் புதுப்பிக்கப்படும். பிரதோஷம் தோறும் மக்கள் பெருமளவில் வஎன்னை நாடி வருவர். இந்தச் செய்தியைப் போய்ச் சொல்" என 1999 மார்ச் 11ஆம் தேதி சொல்லியனுப்பினார். அதன்படி அன்று முதல் "சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுள். படைத்தவனை மட்டுமே வணங்கு. படைப்புகளை வணங்காதே. இன்புற வாழ்வாரே இறைவனடி சேர்வார்  அறம் எனச் சொல்லி உன்னையும் பிறரையும் சித்திரவதைக்கு உள்ளாக்காதே. ஆனந்தம் இருக்குமிடத்திலேதான் சிவம் வெளிப்படும். சிவசொரூபம் ஆனந்த சொரூபம். சிவதாண்டவம் ஆனந்தத் தாண்டவம்" என முதலில் சிவநெறிச் சங்கம் என்ற அடியார் அமைப்பின் மூலமும் பின் சிவபுரம் வாயிலாகவும் ஐயா எடுத்துரைத்து வருகிறார்.

சிவஞானத்தை அள்ளி அள்ளி பருகத்தரும் வள்ளலின் குணம். ஐயா திருவடி தீண்டும் இடம் எல்லாம் அவர் மூச்சுச் காற்று சிவத் தென்றலாக வீசும். இந்த பூமி சிவன் உய்யக் கொள்ளும் பூமியாக மாறும்.

சிவபுரம் ஐயா அவர்கள் இந்தப் பூமியில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தானே எடுத்துக்காட்டாய் வாழ்ந்து அதன்படி பிறரும் வாழ வழிகாட்டி தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.