ஒலிதட்டு வெளியீடு - சைவசித்தாந்தம்

திருவருட்பயன் அமுது

புறச் சந்தான குறவர்களில் ஒருவரும் பெற்றான் சாம்பனுக்கும், முள்ளிச் செடிக்கும் முக்தி கொடுத்தவரும், கொடிக்கவி பாடி ஏறாத கொடியினை ஏற்றியவருமாகிய உமாபதி சிவம் அவர்கள் இயற்றிய சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றாகிய திருவருட்பயனமுது என்ற நூலில் உள்ள நூறு குறள்களுக்கும் இசை வடிவில் பொருள் கூறப்பட்டுள்ளது.