இறைவன்

சிவபெருமான் ஒருவரே கடவுள். படைத்தவன் ஒருவன் மற்றதெல்லாம் படைப்புகள். படைத்தவனை மட்டுமே வணங்கு. படைப்புகளை வணங்காதே. சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் என்கிறார் திருநாவுக்கரசர். திருமாலும், பிரமனும், பார்வதியும், கணபதியும், முருகனும், துர்கையும் சிவபெருமானின் அருளைப் பெற்றவர் என மயங்காதே, இவர்களை வணங்காதே. இவர்களுக்கும் மற்றுமுள்ள யாவருக்கும் அருளியவன் சிவபெருமானே எனத் தெளி, சிவனை மட்டுமே வணங்கு. கொடுப்பதெல்லாம் கடவுள் கிடையாது. கெடுப்பது எல்லாம் கடவுள் கிடையாது. அற்புதங்கள்ளும் அதிசயங்களும் கடவுள் ஆகா தெளிவும் ஞானமும் முக்தியும் தரவல்லதே கடவுள்; அது சிவமே. சிவத்தை எதனோடும் தொடர்புப்படுத்தாதே. தனித்திருக்க வல்லது சிவம் ஒன்றே. சிவமே சிவம் பிற விளக்கங்களெல்லாம் அவம்.