சிவபுரம்

 

உணர்வுத் திருக்கோயில்

சிவபுரம் என்பது கல்லாலும், மண்ணாலும் கட்டி எழுப்பப்பட்ட ஆச்சிரமம் அல்ல, உள்ளத்து உணர்வால் ஒன்றுபட்டு பலருடைய சித்தத்தில் காலூன்றி கட்டி எழுப்பப்பட்ட அடியார் திருக்கூட்டத்தின் உணர்வுத் திருக்கோயில் ஆகும். பூசலார் மனதிலே கட்டினார் கோயில், அங்குதான் செல்வேன் என்று பல்லவ மன்னன் இராஜசிம்மனிடம் சென்று அவன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் குடமுழுக்குக்கு வரமுடியாது என்றார் சிவபெருமான். அதுபோல் சிவபுரத்து ஐயாவும் அடியார்களும் இருக்குமிடம் எல்லாம் எம்பெருமானின் உணர்வுத் திருக்கோயில் இருக்கும்; சிவனாரின் பிரசன்னம் இருக்கும்; தரிசனம் இருக்கும்; அருள் கிடைக்கும். அந்த உணர்வுத் திருக்கோயிலில் உங்களையும் இணைத்து எம்பெருமான் அருளாட்சியை ஏற்படுத்தி எல்லோரும் இன்புற வாழ வழி செய்யவே நாம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.