தினசரி வழிபாடு

தினசரி காலையில் திருப்பள்ளியெழுச்சியுடன் சிவபுரத்தில் அன்றாட நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. தொடர்ந்து காலை தீபாராதனையுடன் சுவாமிக்கு காலை திருவமுது படைக்கப்படுகிறது. பின்னர் மதியம்  திருவமுது படைத்தல், மாலை அபிஷேகம், மாலை தீபாரதனை என தொடர்ந்து  இரவு திருவமுது படைத்து இறைவனை பாடிப் guவியதும் அர்த்தசாம பூஜையுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.