சிவபுரம் ஐயாவின் ஒளித்தட்டு வெளியீடுகள்

கருவறைவாசம்

 

கருவுற்ற நாள் முதல் இறைவன் திருவடி பற்றிக்கொள்ளும் வரை உள்ள மனிதனின் மொத்த வாழ்வையும் குறிப்பிடும் பதிகம். இந்த பதிகத்தை தாய்மார்கள் தொடர்ந்து கேட்டுவந்தால் இறைவனின் அருளுடன் கூடிய அறிவில் சிறந்த குழந்தை பாக்கியம் கிடைப்பது திண்ணம். பிரசவமும் சுகப்பிரசவமாக அமையும்.

 

மேலும் வணிகச்சியின் பிரசவத்திற்கு நேரில் வந்து உதவிய திருச்சிராப்பள்ளி தாயுமானவர் சுவாமிகளைப் போற்றி சம்பந்தர் பாடிய பதிகமும் இதில் இடம் பெற்றுள்ளது. இவ்விரு பதிகங்களையும் பாடப்பாட  புனிதமாகும் கருவறை - உண்டாகும் கர்ப்பம். கைகூடும் சுகப்பிரசவம் - சிறக்கும் தலைமுறை.