வழி

 

வாழ்தலே வழிபாடு

 

மெய்யாலானது இவ்வுலகு,

 

பொய்யாலானது இவ்வுலக வாழ்க்கை.

 

மெய்யால் இவ்வுலகுக்கு மேலும் எழில் கூடவும்,

 

பொய்யாலான இவ்வுலக வாழ்வின்

 

துன்பங்களைக் களையவும்,

 

வேண்டிய புதிய வழிகளைக் கண்டறிந்து,

 

அவ்வழியே வாழ்ந்து காட்ட,

 

எல்லாம் வல்ல சிவபெருமான் அருளால்

 

பணிக்கப்பட்டுள்ளேன் என்பது

 

என் வாழ்வின் நெறி.

 

அவ்வண்ணம்

 

வாழ்தலே வழிபாடு!